2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இந்திய இலங்கை பாதுகாப்புத் தூதுக்குழுக்கள் சந்திப்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) உயர்மட்டக் குழு, திங்கட்கிழமை (01) அன்று இலங்கையில் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தது.

தற்போது இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் மூத்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, முதலில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுராவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது. இங்கு, அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தனர், இவர் வருகை தந்த அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர் அன்புடன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பின் போது இருதரப்பு பரஸ்பர முக்கிய விடயங்கள் குறித்து சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது, இது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியதாக அமைந்தது.

இதேவேளை, மேற்படி தூதுக்குழு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.  வருகை தந்த குழுவை பிரதி பாதுகாப்பு அமைச்சர் அன்புடன் வரவேற்று, பிராந்திய பாதுகாப்பு ஒன்றிணைந்த செயற்பாடுகள் குறித்து நட்புரீதியான கலந்துரையாடல்களை நடத்தினார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி ஆகியோர் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

இந்த தொடர்புகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக பாதுகாப்பு கல்வி மற்றும் மூலோபாய ஒத்துழைப்புத் துறையில் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .