2025 மே 07, புதன்கிழமை

இந்தியாவுக்கு பலமான பதிலடி கொடுக்கப்படும் : பாக்.பிரதமர் அதிரடி

Freelancer   / 2025 மே 07 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை போர் நடவடிக்கையாக கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளார். 

அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது. பலமான பதிலடி கொடுக்கப்படும். 

முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது. பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். மேலும் முழு பாகிஸ்தான் நாட்டின் மன உறுதியும் உங்களுடன் உள்ளது. இந்தியாவை எப்படி சமாளிப்பது எப்படி பதிலடி தருவது என்று தெரியும். 

பாகிஸ்தான் தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரி அவர்களின் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அவர்களின் நோக்கங்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரபூர்வ போர் தொடங்கிவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. 

நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். முக்கியமாக பாகிஸ்தான் பஞ்சாப்பில் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. 

அங்கே உள்ள பயங்கரவாத தீவிரவாத மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல் மூலம் சுமார் 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X