Nirosh / 2022 மே 11 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என கூறிய சுப்ரமணியன் சுவாமிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட் செய்துள்ள மனோ, இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டத்தை எந்தவொரு இந்திய எதிர்ப்பு சக்தியாலும் கைப்பற்ற முடியாது. இதுவொரு தேசபக்திக்கான போராட்டம். இந்திய பாதுகாப்பு என்பது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு இந்திய இராணுவம் வேண்டாம் மாறாக இந்திய முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகளே வேண்டும். ராஜபக்சக்களின் யுகம் முடிவுக்கு வருகிறது. சுவாமி தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.'' எனவும் மனோ தெரிவித்தார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago