2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இந்தியா மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம்:அல்கொய்தா

Editorial   / 2022 ஜூன் 08 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

 ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27 ஆம் திகதியன்று நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ( பா.ஜ.க)  செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார்.

விவாதத்தில் பங்கேற்ற நபர், இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜ.க நீக்கியது.

அதேவேளை, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இது தொடபாக 6 ஆம் திகதியன்று பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக புதுடெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்.

தங்கள் முடிவுக்காக, மேலே குறிப்பிட்டுள்ள பிரதேசங்களில்    காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடுமென அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .