2026 மே 11, திங்கட்கிழமை

இந்தியாவால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வரும் இலங்கை

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோபா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தொடர்பில், இந்தியா தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் நிலை குறித்து, இந்தியாவால் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோபா ஒப்பந்தம் ஊடாக அமெரிக்காவின் இராணுவ முகாமை இலங்கையில் அமைப்பதற்கு தயாராகி வருவதாகவும், குறித்த முகாம் இந்தியாவுக்கு அண்மித்த பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக  தகவல்கள் வெளிவரும் நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பில், இலங்கையின் நடவடிக்கை குறித்து இந்தியா அவதானித்து வருவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவுடன் எவ்வித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .