2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இந்தியாவிலிருந்து வெளியேறிய 786 பாகிஸ்தானியர்கள்

Freelancer   / 2025 மே 01 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி - வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, இவ்விடயத்தில் இராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 24 ஆம் திகதி தொடங்கி ஆறு நாள்களுக்குள் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானிலிருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 1376 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என அந்த அதிகாரி கூறியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .