2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு

Editorial   / 2024 மார்ச் 24 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் வெங்காயம் அதிக அளவில் இருப்பில் இருப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.

கடந்த டிசெம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது, வரும் 31ம் திகதியுடன் இந்த தடை முடிவடைய இருந்தது. பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்திய சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக சரிந்தது. எதிர்வரும் தேர்தலை குறி வைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி தடையை நீடிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்த தடை காரணமாக பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X