2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுக்குப் புறப்பட்டார் மஹிந்த

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ அழைப்பையேற்று, இந்தியாவுக்கு இன்று விஜயம் செய்யயும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரென, அலரி மாளிகை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று, புதுடெல்லிக்கு இன்று (07) விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பெப்ரவரி 11ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பிற்பாடு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமன்றி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் அவர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை ​மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தச் சந்திப்புகள் அ​மையுமென அறிவித்துள்ள அலரி மாளிகை அலுவலகம், அரசியல், வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு, கலாசாரம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், இந்தச் சந்திப்புகளின் போது ஆகக்கூடிய கவனம் செலுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாகக் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு, 2019 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்தார். அதன்போது, இலங்கைக்கு 450 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க, இந்தியப் பிரதமர் இணங்கியிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் அவர், விஜயத்தை மேற்கொள்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .