Janu / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வாவின் தலைமையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்ததன் மூலம் குறித்த சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய டொபிக்கள் , சாக்லேட்கள் லொலிபொப் , சூயிங்கம் , பெப்பர்மிண்ட் ,ஆகிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன:
இச்சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

12 minute ago
34 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
37 minute ago
41 minute ago