2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

”இனி கடைசி பென்ச் என்ற முறை இல்லை”

Editorial   / 2025 ஜூலை 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக பாடசாலைகளின் வகுப்பறைகளில் ‘ப’ வடிவத்தில் இருக்கைகளை மாற்றி, மாணவர்களை அமரவைக்குமாறு பாடசாலைக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடைசி பென்ச் என்ற நடைமுறை இருக்கக் கூடாது என்றும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பாடசாலைகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பாடசாலைக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பாடசாலைகளுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பாடசாலைக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பாடசாலைகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை 'ப' வடிவில் அமர வைப்பதன் மூலமாக அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் இந்த திட்டத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படம், கடைசி பென்ச் இருக்கைகளில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறியதை, அடுத்து கேரளத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  

மாணவர்கள் வரிசையாக அமர்வதற்கு பதிலாக, அரைவட்ட வடிவில் அல்லது 'ப' வடிவில் அமர வைக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது கேரள அரசு. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் தற்போது மாணவர்களை 'ப' வடிவில் அமரவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .