2025 மே 21, புதன்கிழமை

'இனி தடை இல்லை'

S.Renuka   / 2025 மார்ச் 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழு எடுத்த முடிவின்படியே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகமும் இந்த தடையை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாட்டிற்குள் மதப் படைப்புகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .