Editorial / 2024 ஒக்டோபர் 04 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வௌ்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
இருபது வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் தன்னால் இயன்றவரை மக்களுக்காக உழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருந்த ஹோமாகம பிரதேசத்தை மக்களின் அறிவு மையமாக அல்லது பிரக்ஞை பண்டு நகராக மாற்றுவதற்கு இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும் அதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
இன்னும் சில வருடங்களில் மீண்டும் டாக்டர் பட்டம் படித்து திரைப்படம் எடுக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago