2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இன்றிலிருந்து கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (31) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

அத்துடன், ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .