S.Renuka / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல மாகாணங்களில் இன்று ஞாயிங்ஞக்கிழமை (14) மழை பெய்யக் கூடும் என என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும்
ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
மத்திய மலை நாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு (30-40) கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின்போது, ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
32 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
48 minute ago