2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இம்மாத இறுதியில் சீனா செல்கிறார் மோடி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஓகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவில் உள்ள தியான்ஜினுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

 கடந்த 2019 ஆம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வரும் நிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பயணம் வேறு ஒரு வகையிலும் முக்கியத்துவம் பெற உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதாவது வரி விஷயத்தில் அமெரிக்காவின் நெருக்கடி இந்தியாவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு, சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. 

எனவே இந்த சந்திப்பில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கலாம். அந்த வகையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .