2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இயற்கை அனர்த்த முன் ஆயத்த ஒத்திகை

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் 'இயற்கை அனர்த்தத்தின் போது வைத்தியசாலையின் முன் ஆயத்தம்; மற்றும் பதிலுறுத்தல் செயற்பாடு தொடர்பான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் ஒத்திகை' வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் வியாழக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்மாவட்ட பிரதிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் இவ் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இயற்கை அனர்த்தம் ஒன்று இடம்பெற்றால் வைத்தியசாலையில் எவ்வாறு முன் ஆயத்தம் செய்ய வேண்டும்?, காயமடைந்தவர்களுக்கு என்ன வகையான முதலுதவியினை வழங்க வேண்டும்? போன்றன செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வில் இராணுவ வீரர்களின் பங்களிப்பு, எவ்வாறு இயற்கை பேரரிடரின் போது தேவைப்படுகிறது?, பொலிஸாரின் வகிபங்கு என்ன? போன்றவை பற்றி பணிப்பாளரினால் பொதுமக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.

காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகிறது என்பது தொடர்பில் மாதிரி செயன்முறையும் செய்து காண்பிக்கப்பட்டது.

இவ் ஒத்திகையில், வைத்தியசாலை தொண்டர்கள, இராணுவ வீரர்கள், பொலிஸார் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .