Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் பிரசித்தி பெற்றுள்ள ஆவா குழு, இராணுவத்தில் இருந்தோ, அரசியல் கட்சியில் இருந்தோ உருவான குழு அல்லவென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன தெரிவித்தார். பியகம - கொனவல, களனிதிஸ்ஸ மகா வித்தியாலத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கில் செயற்படும் ஆவா குழு தொடர்பில், அரசாங்க அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரது ஆலோசனைன்படி, அவரது முன்னாள் இராணுவ அதிகாரியே ஆவா குழுவை உருவாக்கினார் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, கடந்த 2ஆம் திகதி கூறியிருந்தார். இந்நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆவா குழு தொடர்பில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிடுவதாகவும், இதனூடாக அவர்கள், அரசியல் இலாபம் தேட முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆவா குழு என்பது, வெறுமனே பிரதேச மக்களிடம் கப்பம் பெற்று, குற்றங்களில் ஈடுபடும் கும்பல் ஒன்றே எனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார்.
ஆவா கும்பல் தொடர்பில், பலர் கருத்துக்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குழுவுடன் எந்தவோர் அரசியல் கட்சியோ, தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வந்தவர்களோ தொடர்பானவர்கள் அல்லர், அத்தோடு இது, இராணுவத்தில் இருந்து உருவான குழுவும் அல்லவெனவும் கூறினார்.
குறித்த குழு தொடர்பில், அனைத்துத் தகவல்களையும் சேகரித்துள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.
ஆவா குழு தொடர்பில், சட்ட நடைமுறைகளுக்கு அமைய, பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago