2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Kanagaraj   / 2016 மார்ச் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்மதுளை, வெலிமலுவே மற்றும் கண்டி, தெல்தெனிய ஆகிய இடங்களில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பெல்மதுளை, வெலிமலுவே எனுமிடத்தில், பவுஸ்ரரும், முச்சக்கரவண்டியும் இன்று மாலை 5.45 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், இரத்தினபுரி பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, பெல்வாடிய பிரதேசத்தைச் சேர்ந்தவரே, சம்பவத்தில் பலியாகியுள்ளார், லெல்லுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவ விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில்...

கண்டி-மஹிங்கனை பிரதான வீதியில் தெல்தெனிய வேகல எனுமிடத்தில் இன்று மாலை 7.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச்சேர்ந்த மாணவன் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த மற்றுமொரு மாணவன், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மாணவன், விபத்தில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

பல்கலைக்கழக மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும், மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பரும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .