Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 01 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவேறு பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
அவிசாவளை, குருகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அமிதிரிகம பிரதேசத்திலிருந்து தல்துவ பிரதேசம் நோக்கி சைக்கிளில் பயணித்தவர் மீது லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். ஹேவாஹின்ன, தும்கொலஹேன பிரதேசத்ததைச் சேர்ந்த 50 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டள்ளதாக அவிசாவளை பொலிஸார் கூறினர்.
இதேவேளை, அம்பலாங்கொடை - அலுத்வல வீதியில் மீட்டியாகொடை, ரந்தேலவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி ஏற்பட்ட விபத்தில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கஹவ, படபொல வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 minute ago
27 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
31 minute ago
36 minute ago