2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நாமல் தோல்வியடைவார்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரகசிய வாக்கெடுப்பை நடத்தாது என்றும் அவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் நாமல் ராஜபக்‌ஷ தோல்வியடைவாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு- காலி முகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதற்காக சூழ்ச்சி செய்கின்றனர். நாளையிலிருந்தே போராட்டம் ஆரம்பமாகும். இந்நிலையில் எமக்கிருக்கும் சவால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியல்ல. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் மஹிந்த ராஜபக்‌ஷவுமே எமது சவால் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமது கட்சியின் தலைவர் சிறந்தப் போட்டியாளர். அவருடன் போட்டி​யிட எவரும் இல்லை என்றும் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .