2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு பதில்களுக்கும் புள்ளிகள்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளி பாத மலை எந்த மாகாணத்துக்குரியது? என நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களென விடையளித்துள்ளனர். 

நில அளவையியல் திணைக்களத்தின் படி, முறைப்படி சிவனொளி பாத மலையானது சப்ரகமுவ மாகாணத்துக்குரியது என்ற போதிலும் வரைபடங்களின்படி இது மத்திய மாகாணத்துக்குரியதாகக் கருதப்படுகின்றது.

எனவே, இவ்விடயத்தில் சிக்கல் நிலை எழுந்ததாகவும் எனினும், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் நலன்கருதி இவ்விரண்டு பதில்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .