2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாம் எலிசபத் மகாராணி, பிரதமர் நரேந்திர மோ​டி வாழ்த்து

Gavitha   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்துக்கு, பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக, பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணியால் விடுவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு, இனிவரும் வருடங்கள் அதிஷ்டம் மிக்கதாக அமையவேண்டும் என்றும் அவர் அதற்கு தான் பிரார்த்திப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் அயல் நாடான இலங்கைக்கும் இந்தியாவின் மிகவும் நெருக்கமான நண்பரான இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X