Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த வௌ்ளிக்கிழமை (06) அன்று சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலங்கள் 2026 பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆள்கடலில் அபாயகரமான அவுடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.
இதற்கு அமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமாகவும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமாகவும் நடைமுறைக்குவருகின்றன.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026