2025 மே 02, வெள்ளிக்கிழமை

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
 
மன்னார் கடற்பரப்பில் நேற்று அதிகாலை 32 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
 
நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுத்து படகுகளை மீட்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .