2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை

Freelancer   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது.

இந்த விலை திருத்தங்கள் நேற்று (21) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை  230 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பாவின் அதிகபட்ச விலை 240 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவிப்பில் ஒரு கிலோ கிராம் கீரி பொன்னி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், இந்த விலை திருத்தங்கள் நேற்று (21) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .