Editorial / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என இன்று (07) தனது முடிவை அறிவிக்கவுள்ளது.
நேற்று முன்தினம் (05) நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
நேற்றுக் காலை 11 மணிக்கு அவர் இந்த முடிவை அறிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது, இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பு பின்னர் இரத்துச் செய்யப்பட்டது. இன்று முடிவு தெரியப்படுத்தப்படும் என, ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டுள்ளதுடன், இதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பதா- தனியாக போட்டியிடுவதா என்று கருத்துக்கள் அறியப்படவுள்ளன.
இது தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்பட்டதும், ஜனாதிபதி, ஊடகங்களுக்கு அறிவிப்பார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago