2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

Freelancer   / 2023 நவம்பர் 16 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி  49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (19) இடம்பெறவுள்ள 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .