J.A. George / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் நேற்று பதிவானதுடன் இதுவரை பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவுலன்கடவல பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் வெலிகந்த கொவிட் 19 சிகிச்சை மையத்தில் இருந்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதேவேளை, பல்வேதலவின்ன பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர், தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதன்பின்னர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.
நுகேகொடை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்
இதேவேளை, வத்தளை பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் தொம்பே மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மேலும், ஹூன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
23 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
56 minute ago
1 hours ago