2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கையின் மறுசீரமைப்புக்கு சிங்கப்பூர் உதவும்

Princiya Dixci   / 2016 மார்ச் 01 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் மறுசீரமைக்கப்பட்டள்ளமையால் சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு முன்வரவுள்ளதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நேற்று திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார். 

இலங்கை வெளிவிவகார அமைச்சை மறுசீரமைப்பு செய்வதற்கான திறன் கட்டட உதவிகளை வழங்குவதற்கு சிங்கப்பூர் முன்வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஜனவரி மாதம், சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்திருந்ததுடன், வெளிவிவகார அமைச்சின் மனித வள முகாமைத்துவம் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கங்களைப் பெற்றிக்கொண்டிருந்தார். 

இதன் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டள்ளார். 

மேலும், இலங்கை அரசாங்கத்தால் கோரப்படவுள்ள உதவிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .