2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகாராலயம்

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகாராலயம் அடுத்த வருடம்  அமைக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ,   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜோன் கீ விடுத்த விசேட அழைப்பையடுத்து, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நியூசிலாந்து  பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் பாரியார், அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும், அவருடன் பயணமாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .