2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் நடைபெறுவது 'கொத்துரொட்டி அபிவிருத்தி'

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

“எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது, கனவுப் பட்டம் போன்றது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், பாரியளவில் ஆரவாரத்துடன் தயாரிக்கப்படும் கொத்தும் காணப்பட்டாலும், அபிவிருத்தியென்ற ஒன்றும் இல்லை. நாட்டின் பொருளாதாரமும், இடியப்பச் சிக்கலாகியுள்ளது" என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  

கொழும்பு, புஞ்சிபொரளையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் முதலீட்டை அடிப்படையாகக் கொண்டே, இரண்டு வாரங்களுக்குள் வரவு - செலவுத் திட்டத்தினை முன்வைக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயல்கிறார். ஆனால், அது நடக்காத காரியம்" என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .