2025 மே 17, சனிக்கிழமை

இலங்கையர் உட்பட 19 பேர் மீட்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் எல்லை நகரமொன்றில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் உட்பட 19 வெளிநாட்டு குடிவரவாளர்கள், மெக்ஸிக்கோ அதிகாரிகளால் சனிக்கிழமை (05) மீட்கப்பட்டனர்.

ஒரு பிரஜையின் முறைப்பாட்டை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட  மத்திய அரசாங்க பொலிஸார்  இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையை  மேற்கொண்டதாக  தேசிய  குடிவரவு  நிறுவனத்தை  மேற்கோள்காட்டி  எல் டெய்லி போஸ்ட் தெரிவித்தது.

தேசிய குடிவரவு நிறுவனமும் மத்திய அரசாங்க பொலிஸாரும்  ஒவ்வொரு வீடாக  சோதனையிட்டு  ஒன்பது  ஹொண்டுரா பிரஜைகளையும் இரண்டு  சரவடோர் பிரஜைகளையும் ஓர் இலங்கை பிரஜையையும் கண்டுபிடித்தனர்.

மிரட்டி காசு பறிக்கும் ஒரு குழு  இவர்களை பிணைக் கைதிகளாக  பிடித்த வைத்திருந்தது.

அமெரிக்காவின் எல்லையில் விடுவதாக கூறி இவர்களை அழைத்து சென்ற மிரட்டல் குழுவினர் இவர்களை அடைத்து வைத்தனர்.

மேலும் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பெயர்கள்,தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்றுக்கொண்டு அவர்களிடம் தாம் பிடித்து வைத்திருக்கும் உறவினர்களை விடுவிக்க   பணம் தர      வேண்டுமென மிரட்டினர்.

இந்த குற்றச் செயல் குழுவில் ஒருவர் மிரட்டி நடவடிக்கையில் போது பிடிபட்டுள்ளார்.

குடியேற்றவாசிகள் தற்போது தேசிய குடிவரவு நிறுவனத்தின் கவனிப்பில் உள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .