Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து, பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுடன், இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில்,
தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இவ்வாறாக, சர்வதேச பயங்கரவாதத்துடன் இணைந்திருந்த இலங்கையர் ஒருவர், கடந்த 2015ஆம் ஆண்டில், சிரியாவில் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என்றும், பொலிஸ்மா அதிபர் நினைவுப்படுத்தினார்.
இந்தோனேஷியாவின் பாலி பிரதேசத்தில் நடைபெற்றுவரும், இன்டர்போலின் (சர்வதேச பொலிஸாரின்) 85ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாடு, இன்று வியாழக்கிழமையுடன் (10) முடிவடைகிறது. இதில், சர்வதேச நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சுமார் 1,200 பொலிஸ் உயரதிகாரிகள், இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ளனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் மா அதிபர், “பயங்கரவாதம் தொடர்பில், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு கருத்து இருக்க வேண்டும். சர்வதேச ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும், பயங்கரவாதம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்ற போதிலும், அனைத்து நாடுகளும் அந்தப் பயங்கரவாதம் தொடர்பான ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். இல்லாவிடின், சர்வதேச ரீதியில் வியாபித்திருக்கின்ற பயங்கரவாதத்தை முறியடிப்பது கடினமாகிவிடும்” என்று எடுத்துரைத்தார்.
இலங்கையிலிருந்து, கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்ட நிலையில், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலேயே, இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது” என, பொலிஸ் மா அதிபர், மேலும் கூறினார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago