Freelancer / 2025 டிசெம்பர் 12 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த முதலாவது 'இலங்கையர் தினம்' தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வானது கொழும்பு மாநகர சபை மைதானம், விகாரமஹாதேவி பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில், பொது மற்றும் தனியார் துறையினரின் பங்கேற்புடன் நான்கு வலயங்களைக் கொண்ட ஒரு பெரிய அளவிலான தேசிய கொண்டாட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ஒக்டோபரில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள, முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ள, மற்றும் 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் அவசரகால சேவைகள் தொடர்ந்தும் இயங்கிவரும் இத்தருணத்தில், நாடு தழுவிய கலாசார விழாவை நடத்துவது பொருத்தமற்றது என அரசாங்கம் தீர்மானித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (a)
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago