2024 மே 18, சனிக்கிழமை

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு

Simrith   / 2024 மே 01 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிநிதிகளை அங்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அயல்நாட்டுத் தலைவர்களுக்கு கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய நுண்ணறிவு வழங்கப்படும் என்றும், அதன் உபாயங்கள் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறை குறித்தும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்றும் பா.ஜ.க தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி, வியட்நாமின் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, பங்களாதேஷின் அவாமி லீக், இஸ்ரேலின் லிகுட் கட்சி, உகாண்டாவின் தேசிய எதிர்ப்பு இயக்கம், தான்சானியாவின் சாமா சா மபிந்துசி மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ரஷ்யா கட்சி ஆகியவை இந்தியாவுக்கு வருகை தரும் அரசியல் கட்சிகளில் அடங்கும்.

மொரிஷியஸ் தொழிலாளர் கட்சி, மொரிஷியஸ் போராளி இயக்கம் மற்றும் மொரிஷியஸ் கட்சி மொரிசியன் சமூக ஜனநாயக கட்சி, மற்றும் நேபாளி காங்கிரஸ், ஜனமத் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் நேபாளத்தில் இருந்து ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி ஆகியவையும் பாஜகவின் அழைப்பில் அடங்கும் கட்சிகளாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .