2025 மே 21, புதன்கிழமை

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

Janu   / 2025 மார்ச் 09 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, கொலமுன்னவில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவரைத் தாக்க முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டார்.

பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அடுத்த புதன்கிழமை (12)  கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

முறைப்பாட்டாளரும் அண்டைய வீட்டார் என்றும், இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார  தனது காரை வீதியைத் தடுக்கும் வகையில் நிறுத்திய பின்னர் தகராறு ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .