2025 ஜூலை 16, புதன்கிழமை

’இலங்கை கொரோனாவின் உச்சகட்டத்தை கடந்து வருகிறது’

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையானது, கொரோனா வைரஸ் தொற்றின் உச்ச கட்டத்தைக் கடந்து வருவதாக சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தற்போது உலகம் முழுதும் கொரோனா தொற்றால் 126,757 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் கடந்த சில வாரங்களில் அரசாங்கம் எடுத்த சரியான முடிவுகள் காரணமாக, புதிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் உறுதிப்படுத்தப்படும் தொற்றாளர்கள், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து மாத்திரமே அடையாளம் காணப்படுகிறார்கள் என்றும் நாட்டில் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மாத்திரம் (14) 15 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும்  இவர்களில் 8 பேர், சுவிஸ் போதகரால் நடத்தப்பட்ட ஆராதனைகளில் கலந்துகொண்டவர்கள் என்றும், இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த 15 தொற்றாளர்களுடன் நாட்டில் மொத்தமாக 233 பேர் கொரோனா தொற்றாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளனரென்றும் 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதாகவும் 63 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .