2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இலங்கை சென்ற ரோபோ சங்கருக்கு நேர்ந்த சோகம்

Editorial   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர் ரோபோ சங்கர்.

இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர், பறவைகளையும் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்று வெளியானது.

இவர் தன்னுடைய மனைவியுடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர்.

இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .