2025 ஜூலை 30, புதன்கிழமை

இலங்கை மக்களுக்காக தி.மு.க ஒரு மாத ஊதியம்

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் இதனை அறிவித்துள்ளது.

நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

அத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என கட்சியின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழக பாரளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .