2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் கூறியுள்ளது.

கடந்த காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்ட கொரோனா தொற்று காரணமாகவும், ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அல்சைமர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .