2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இலங்கை மின்சார சபையில் மறுசீரமைப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (04) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உட்பட எழுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (04) காலை கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் குழு, அபிவிருத்தி முகவர்கள், துறைசார் நிபுணர்கள், பங்குதாரர்களை சந்தித்துள்ளதுடன், அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .