2025 மே 22, வியாழக்கிழமை

இலங்கை விமான படையின் 74வது ஆண்டு நிறைவு

R.Tharaniya   / 2025 மார்ச் 02 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானின் பாதுகாவலர்கள் என்று  அழைக்கப்படுகின்ற இலங்கை விமானப்படை, தனது 74 வது ஆண்டு நிறைவை 2025 மார்ச் 02 அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின்  தலைமையில் பெருமையுடன்  கொண்டாடியது.

இலங்கையில் விமானப்படையின் வரலாறு 1951 மார்ச் 2 ஆம் திகதி ராயல் சிலோன் விமானப்படை நிறுவப்பட்டதன் மூலம் ஆரம்பமாகியது , மேலும் இலங்கை சோசலிச நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட உடன், ராயல் சிலோன் விமானப்படையாக இருந்து  1972 மே 22 ஆம்  திகதி   இலங்கை விமானப்படை யாக மாற்றம் அடைந்தது. "நாட்டைப் பாதுகாப்போம்" என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, இலங்கை விமானப்படை 74 ஆண்டுகளாக தாய்நாட்டிற்கான தனது பணியை முறையாக நிறைவேற்ற முடிந்தது.


இலங்கை வான்வெளியின் நிரந்தர பாதுகாவலரான இலங்கை விமானப்படை, முழுமையான மனித நேயம், புதிய தொழில்நுட்ப அறிவு, தொழில்முறை முதிர்ச்சி மற்றும் ஒழுக்கம் கொண்ட பெருமைமிக்க இராணுவமாக தனது கடமைகளைச் செய்து, தாய் நாட்டிற்கு ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளின் சிறப்பு பங்களிப்பைச் செய்து, நாட்டின் வான்வெளியைப் பாதுகாத்து வருகிறது.

தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உட்பட மொத்தமாக  20 விமானப்படைத் தளபதிகளின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை விமானப்படை, 74 ஆண்டுகளாக இலங்கை மக்களைப் பாதுகாப்பதன் மூலம் தாய்நாட்டிற்கான தனது பணியை நிறைவேற்றியுள்ளது.  மேலும் தாய் நாட்டிற்காக தனது மகத்தான பணியை தொடர்ந்து செய்துவர இலங்கை விமானப்படை எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X