2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை விவகாரம்: 19இல் சர்வகட்சி கூட்டம்

Freelancer   / 2022 ஜூலை 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) மாலை சர்வ கட்சிக் கூட்டம் நடைபெறும் என பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 

இலங்கை நெருக்கடி நிலை தொடர்பாக அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற சர்வ கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18 ஆம் திகதி  ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் 12 வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை சர்வகட்சி கூட்டம் டெல்லியிலுள்ள பாராளுமன்ற கட்டத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X