2025 ஜூலை 30, புதன்கிழமை

இலங்கைக்கு உதவிய மதுரை யாசகர்

Editorial   / 2022 மே 05 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி யாசகம் எடுத்து தனது பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.

2020 மார்ச் மாதம் மதுரைக்கு வந்தார். கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. அவரால் தூத்துக்குடிக்குத் திரும்ப முடியவில்லை.   மதுரையிலேயே தங்கி விட்டார். யாசகம் எடுக்கும் பணத்தில், கொரோனா நிவாரண, முதலமைச்சரின் நிதிகளுக்கு 51 தடவைகளாக  ரூ.5 இலட்சத்து 10 ஆயிரம் வழங்கியுள்ளார்.

  “முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக நிதி வழங்கலாம் என்று 50 ஆயிரம் ரூபாவுடன் 52ஆவது தடவையாக வந்துள்ளார்.  இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில், இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அதனால், அந்த பணத்தை முத​லமைச்சர் நிதிக்கு வழங்கிவிட்டேன். இது இலங்கை தமிழர்களுக்கு சென்றடைய வேண்டும்” என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .