2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கையர்களுக்கு விட்டமின் ’டி’ குறைபாடு

Freelancer   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 50 சதவீதமானவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு காணப்படுவதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிரஞ்சலா மிகொட விதான தெரிவித்தார்.

விட்டமின் டி குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாவதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

சூரிய ஒளி மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான விட்டமின் டியைப் பெற முடியும் என்றும், இது மிகவும் எளிமையான மற்றும் மலிவான வழி என்றும் குறிப்பிட்டார்.

சராசரியாக நபரொருவர், ஒரு நாளைக்கு அரை மணி நேரம் வீதம் வாரத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .