Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 11 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கிறிஸ் எலியாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றத்தையும் அவர் பாராட்டினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கிறிஸ் எலியாஸ் தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று(10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சமூக-பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு முழு ஆதரவளிப்பதாக கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .