Editorial / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் நேற்று (14) இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாத அடையாளம் காணப்பட்ட 14 பேர், ஏற்கெனவே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய 8 பேர் புணானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், மிகுதி 4பேர் முழங்காவில் கண்காணிப்பு நிலையத்தில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மேலும் ஒருவர் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டவர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago