2025 ஜூலை 30, புதன்கிழமை

இலங்கையில் நடப்பது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

Freelancer   / 2022 மே 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாகும் என  தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, விழிப்பாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் மேற்கொண்ட தவறான முடிவுகளே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்டவர்களை பதவி விலகக்கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில், பிரதமர் பதவியைத் துறந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அலரிமாளிகையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களை தாக்கியதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

“இலங்கையில் இப்போது நடப்பவற்றை பார்த்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள மெகபூபா முப்தி, இந்தியாவில் வகுப்புவாத வெறி 2014 முதல் அதிகரித்துள்ளது.

இலங்கையைப் போன்று தீவிர தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாத பாதையில் செல்கிறது. இவை அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்” என எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .