J.A. George / 2020 ஒக்டோபர் 14 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று (13) மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் 194 பேருக்கு தொற்று உறுதியானது.
அவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 114 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மினுவாங்கொடை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆயிரத்து 697 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago