2025 மே 01, வியாழக்கிழமை

இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது. 

அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 

இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .